×

ஜவ்வரிசி உப்புமா

தேவையானவை

ஜவ்வரிசி – 200 கிராம்
வறுத்த வேர்க்கடலை – 100 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட் – 1 கப்
பச்சைப் பட்டாணி – 1சிறிய கிண்ணம்
நறுக்கிய குடைமிளகாய் – 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி விழுது, மிளகுத்தூள் – தலா 1 தேக்கரண்டி
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 1 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஜவ்வரிசியை நனையும் வரை தண்ணீர்விட்டு அரைமணி நேரம் ஊறவைத்து எடுக்கவும். இப்போது ஜவ்வரிசி ஊறி உதிரி உதிரியாக மிருதுவாக இருக்கும். வாணலியில் நெய்விட்டு சூடாக்கி பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட், குடைமிளகாய், வெங்காயம், இஞ்சி விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலையைப் போட்டுக்கிளறவும். எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் வறுத்துப் பொடித்த வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர், நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

The post ஜவ்வரிசி உப்புமா appeared first on Dinakaran.

Tags :
× RELATED முள்ளு கத்தரிக்காய் துவையல்