×

பிரெட் போண்டா

தேவையானவை:

கடலை மாவு – 150 கிராம்,
பிரெட் துண்டுகள் – 10,
உருளைக் கிழங்கு – 4,
வெங்காயம் – 2,
இஞ்சித் துருவல் – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 1,
கடுகு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு தாளித்து… இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பிரெட் தூள், உருளைக் கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டை களாக உருட்டி, கரைத்த மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

The post பிரெட் போண்டா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)