×
Saravana Stores

பாதாம் அல்வா

தேவையானவை:

பாதாம் பருப்பு – 1 கப்,
முந்திரிப் பருப்பு – 10,
சர்க்கரை – 1 கப்,
பால் – 1 டேபிள் ஸ்பூன்,
நெய் – அரை கப்,
ஏலப்பொடி – 3 டீஸ்பூன்,
குங்குமப் பூ – 1 சிட்டிகை,
கேசரி கலர் – 2 சிட்டிகை,
வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

பாதாம் பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். பாதாமை தோலுரித்துக் கொள்ளவும். பின் இரண்டு பருப்புகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சவும். சர்க்கரை கரைந்ததும், அரைத்த விழுதையும் சேர்த்து கிளறவும். பருப்பும் சர்க்கரையும் சேர்ந்தவுடன் பாலில் குங்குமப்பூ, கேசரி கலர், ஏலப்பொடி, கரைத்து கலவையில் சேர்க்கவும். கலவை இறுக ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். பிறகு கலவை நன்றாக இறுகி நெய் வெளியே வரும்போது இறக்கி வெள்ளரி விதை சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான பாதாம் அல்வா தயார்.

 

The post பாதாம் அல்வா appeared first on Dinakaran.

Tags :
× RELATED மேகி தோசை