×

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணம்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பதிவு

டெல்லி: 3 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு சென்றார். இந்தியா – ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டார். உலகளாவிய முக்கிய பிரச்னை குறித்து ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 2019ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி ரஷ்யா பயணிக்கிறார். 2019ம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்றார்.

ரஷ்யாவில் இருந்து ஆஸ்திரியா செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டரை சந்தித்து பேசுகிறார். ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான்டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெசுமருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரியாவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார். பிரதமர் மோடி தனது பயணத்தின்போது மாஸ்கோ, வியன்னாவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார்.

இந்நிலையில் ரஷ்யா, ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது தொடர்பாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “அடுத்த மூன்று நாட்களில், ரஷியா மற்றும் ஆஸ்திரியாவில் இருப்பேன். இந்தியா காலப்போக்கில் நட்புறவை சோதித்துள்ள இந்த நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இந்த பயணங்கள் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினருடன் தொடர்பு கொள்வதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

 

The post ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவுக்கு 3 நாள் அரசுமுறை பயணம்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பதிவு appeared first on Dinakaran.

Tags : Russia ,Austria ,Narendra Modi ,Delhi ,Modi ,22nd India-Russia Summit ,President ,Dinakaran ,
× RELATED நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல்...