×

நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 8: நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறியுள்ளார். கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள்/அலகு) நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டமானது மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளுக்கு 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய கோழிகள் இலவசமாக வழங்கப்படும். நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவ தேவையான கோழிக்கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத் தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் (ரூ.3,13,750/-) 50 சதவீதம் (ரூ.1,56,875/-) மானியமாக மாநில அரசால் வழங்கப்படும்.

திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீத (ரூ.1,56,875/-) பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். பயனாளிகளிடம் கோழிக்கொட்டகை அமைக்க மின் இணைப்புடன் கூடிய 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மேலும் இந்தப்பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.பயனாளிகள் விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 3 பயனாளிகள் முதல் 6 பயனாளிகள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். மேற்காணும் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் தொழில்முனைவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி 10.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,District Collector ,Mahabharathi ,
× RELATED 100 குடும்பங்கள் வசிக்கும்...