- திருச்செங்கோடு
- திருச்செங்கோடு தாலுக்கா
- Elachipalayam
- கொக்கலை கிராமம்
- எலையம்பாளையம்
- நெய்கரம் பாளையம்
திருச்செங்கோடு, ஜூலை 8:கல்குவாரிக்கு தடை விதிக்கக் கோரி, திருச்செங்கோடு அருகே வீடுகளில் பொதுமக்கள் கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம், எளையாம்பாளையம் நெய்க்காரம் பாளையம் பகுதியில். ஜனவரி மாதம் புதிய தனியார் கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தடை செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அந்த குவாரி இயங்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த நிலையில், அரசு ஆவணங்கள் அனைத்தும் இருந்தும், குவாரியை தடை செய்யாமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை கண்டித்து, அனைத்து வீடுகளிலும் நேற்று கருப்பு கொடி ஏற்றி, பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கோக்கலை, நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம், குஞ்சாம்பாளையம், பெரியமணலி, குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களிலும், கருப்பு கொடியேற்றி எதிப்பு தெரிவிக்கப்பட்டது.
The post வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.