×

கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டாசில் கைது

நாமக்கல், அக்.26: நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் மற்றும் போலீசார், கடந்த மாதம் பேளுக்குறிச்சி பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி, பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (37), பிரகாசம் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 150 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படனர். இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் உமா நேற்று உத்தரவிட்டார்.

The post கள்ளச்சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasil ,Namakkal ,Namakkal Prohibition Enforcement Unit ,Inspector ,Shankarapandian ,Pelukurichi ,Palanivel ,Prakasam ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு..!!