×

கம்பத்தில் 116 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது

 

கம்பம், ஜூலை 8: கம்பத்தில் 116 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தேனி மாவட்டம், கம்பத்தில் புகையிலை பொருட்கள் மொத்த விற்பனை நடைபெறுவதாக வடக்கு இன்ஸ்பெக்டர் பார்திபனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று கம்பம் நந்தகேபாலன் கோவில் தெருவில் உள்ள பாண்டி மகன் கண்ணன்(36) என்வரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பிளாஸ்டிக் சாக்குபையில் 104 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும் அவர் யாரிடம் புகையிலை பொருட்களை வாங்கினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கம்பம் தெற்கு சப்இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்ற சோதனையில் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையை சேர்ந்த கண்ணன் (47) என்பவரிடம் 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.

The post கம்பத்தில் 116 கிலோ புகையிலை பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kamba ,Gambam ,Northern Inspector ,Parthiban ,Gampa, Theni district ,Kampam Nandhakepalan ,Kampam ,Dinakaran ,
× RELATED கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்