- கபில் சிபல்
- ராஜ்ய சபா
- புது தில்லி
- துணை பேச்சாளர்
- ஜெகதீப் தங்கர்
- மத்திய அமைச்சர்
- பி. சிதம்பரம்
- திருவனந்தபுரம், கேரளா
- யூனியன் அரசு
- சபாநாயகர்
புதுடெல்லி: கேரள மாநிலம்,திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தன்கர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியை பார்த்தேன். அதில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்கள் பகுதி நேர பணியாளர்களால் உருவாக்கப்பட்டவை என்று அவர் கூறியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இது நாடாளுமன்றத்துக்கு ஏற்பட்ட மன்னிக்க முடியாத அவமானமாகும். நாடாளுமன்ற எம்பிக்கள் என்ன பகுதி நேர பணியாளர்களா.
பகுதி நேர ஊழியர்கள் என எம்பிக்களை இழிவுபடுத்தும் அவதூறான கருத்தை தயவு செய்து திரும்ப பெற வேண்டும். என்று தெரிவித்தார். இந்நிலையில், சுயேச்சை எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கபில் சிபில் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், நாடாளுமன்ற மரபுகளை தினந்தோறும் அவமதிப்பு செய்வது யார்? எதிர்க்கட்சிகள் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
The post நாடாளுமன்ற மரபுகளை அவமதிப்பது யார்?: மாநிலங்களவை தலைவருக்கு கபில் சிபல் கேள்வி appeared first on Dinakaran.