×

மக்களுடன் முதல்வர் திட்டம்: 11ம் தேதி அடுத்த கட்டம் துவக்கம்

தஞ்சாவூர், ஜூலை 7: மக்களுடன் முதல்வர் திட்டம் அடுத்தக்கட்டமாக வரும் 11ம் தேதி துவங்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் 11.07.2024 அன்று தஞ்சாவூர் வட்டாரத்திற்குட்பட்ட முன்னையம்பட்டி கிராம ஊராட்சியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சி துவக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 15.07.2024 முதல் தொடர்ச்சியாக மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரகப்பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்விபரங்கள் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விபரங்கள் பத்திரிக்கை செய்தி வாயிலாகவும், சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். அந்தந்த ஊராட்சிப்பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

The post மக்களுடன் முதல்வர் திட்டம்: 11ம் தேதி அடுத்த கட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Chief Minister ,Thanjavur district ,Munnayambatti ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல்...