- Pudumapillai
- பாளை செய்யார்
- சேயார்
- கிருஷ்ணமூர்த்தி
- மேல்புதூர் கிராமம்
- சீயாரு தாலூக்
- திருவண்ணாமலை மாவட்டம்
- புதுமப்பிள்ளை
- Seiyaru
செய்யாறு, ஜூலை 7: செய்யாறு அருகே காதல் திருமணமான 2 மாதத்தில், டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா மேல்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(28), அறுவடை இயந்திர டிரைவர். இவர் ஒரு பெண்ணை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு, பைக்கில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே எடப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். வெம்பாக்கம்-அழிவிடைதாங்கி சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது பைக் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி கவுசல்யா, பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். காதல் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலி செய்யாறு அருகே சோகம் காதல் திருமணமான 2 மாதத்தில் appeared first on Dinakaran.