×

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். அலுவலகத்தில் ஊர்வசி செல்வராஜ் நினைவுதினம்

ஏரல், ஜூலை 7: ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏவுமான ஊர்வசி செல்வராஜின் 15வது நினைவுதினம் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது படத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தூத்துக்குடியில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது நினைவுதினத்தைொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஊர்வசி செல்வராஜ் படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செலுத்திய பிறகு ஏழைகளுக்கு காலை உணவு வழங்கினர். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, மாநகர மாவட்ட துணைத் தலைவர் மடத்தூர் தனபால்ராஜ், மாணவர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரவின்துரை, மேற்கு மண்டல பொருளாளர் காமாட்சி தனபால் மற்றும் தாமரைலிங்கம், தனுஷ், முத்துராஜ், மாரீஸ்வரன், வானமாலை கார்த்திக், முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். அலுவலகத்தில் ஊர்வசி செல்வராஜ் நினைவுதினம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,South ,District ,Cong. Urvashi Selvaraj Memorial Day ,Eral ,MLA ,Urvashi Selvaraj ,Urvashi Amritraj ,Thoothukudi district ,Tuticorin ,Tuticorin South District Congress ,Urvashi ,Selvaraj memorial day ,
× RELATED நிலம் அளக்க தாமதம்: வட்டாட்சியருக்கு அபராதம்..!!