×
Saravana Stores

எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய ஜெகன் மோகன் முடிவு?: எம்பியாக போவதாக இணையத்தில் வைரல்

திருமலை: ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தெலுங்கு தேசம் கட்சி அபார ெவற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. 11 எம்எல்ஏ இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். ஆனால் சந்திரபாபு நாயுடு அரசு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்க தயாராக இல்லை.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள ெஜகன்மோகன் ெரட்டி கடப்பா எம்.பியாக தனது கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தம்பி அவினாஷ் ரெட்டியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு கடப்பா எம்பி தொகுதியில் போட்டியிட ஜெகன் மோகன் விரும்புகிறார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய ஜெகன் மோகன் முடிவு?: எம்பியாக போவதாக இணையத்தில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Jagan Mohan ,MLA ,Tirumala ,YSR Congress ,Andhra ,state assembly elections ,Telugu Desam Party ,Chief Minister ,Jaganmohan Reddy ,
× RELATED திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு 60 நாட்களாக குறைப்பு?