×
Saravana Stores

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜெகன் கட்சி மாஜி எம்எல்ஏ போக்சோவில் அதிரடி கைது

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொடுமுரு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் சுதாகர். இவரது வீட்டில் பணிபுரியும் தம்பதியின் மகளான சிறுமி அவ்வப்போது பெற்ேறாருக்கு உதவி செய்ய உடன் வந்து சென்றதாக தெரிகிறது. அப்போது எம்எல்ஏ சுதாகரின் பார்வை சிறுமி மீது விழுந்தது.சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வீடியோவாகவும் எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாக மாறியது. இதுகுறித்து தகவல் ெதரிந்து போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் 2024 சட்டமன்ற தேர்தலில் அவருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கர்னூல் இரண்டாவது நகர போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தனர். இதனையடுத்து மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் எம்எல்ஏ சுதாகரை போக்சோவில் கைது செய்தனர். இதனையடுத்து சுதாகரை கர்னூலில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் ேநற்று கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சுதாகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் சுதாகரை மாவட்ட சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜெகன் கட்சி மாஜி எம்எல்ஏ போக்சோவில் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Jagan Party ,MLA ,Pokso ,Tirumala ,Kodumuru assembly ,Kurnool district ,Andhra ,YSR ,Sudhakar ,Congress ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:இசை ஆசிரியர் போக்சோவில் கைது