×
Saravana Stores

வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

 

காங்கயம், ஜூலை 6: காங்கயத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. காங்கயம் பிடிஓ அலுவலத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் அனுராதா, விந்தியா முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் பரிமளா, டாக்டர் பாலசந்திரன் பேசினர். கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி செல்ல கூடிய குழந்தைகள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வட்டார கல்வி அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்

The post வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District Child Protection Committee ,Kangayam ,District Level Child Protection Committee ,Union Chairman ,Mahesh Kumar ,Kangyam PTO ,Anuradha ,Vindhya ,District Child Protection ,District ,Child Protection Committee ,Dinakaran ,
× RELATED காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்