×

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்

சேலம்: 8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது. சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

தொடர்ந்து திண்டுக்கல்லில் ஜூலை 26, 27, 28 தேதிகளில் லீக் ஆட்டங்களும், ஜூலை 30ம் தேதி முதல் குவாலிபயரும், ஜூலை 31ம் தேதி எலிமினேட்டரும் நடைபெற இருக்கின்றன. சென்னையில் 2வது குவாலிபயர் ஆக.2ம் தேதியும், இறுதி ஆட்டம் ஆக.4ம் தேதியும் நடைபெறும். சேலத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

 

The post டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல் appeared first on Dinakaran.

Tags : TNBL D20 ,Chepak ,Go ,Salem ,8th Tamil Nadu Premier League ,DNBL ,T20 cricket series ,Goi Kings ,Tamil Nadu ,Shepak-Go ,Dinakaran ,
× RELATED கோ-கோ போட்டியில் திருச்சி பள்ளி சாதனை