×

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

சென்னை : பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் சிறையில் உள்ளார், அலெக்சிஸ் சுதாகர். அலெக்சிஸ் சுதாகர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் அலெக்சிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து தோட்டாக்களுடன் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது appeared first on Dinakaran.

Tags : Pa. ,J. K. ,Secretary of State ,Chennai ,Secretary of ,Attorney ,Section ,Raudi Sirkazhi ,Satya ,Alexis Sudhakar ,Alexis Sudkar ,J. K. Attorney Section ,Dinakaran ,
× RELATED மீண்டும் சீட் கிடைக்காததால் பா.ஜ.க. எம்எல்ஏ விலகல்