×

இளம்பெண்களை பர்தா அணிய வற்புறுத்திய யூ டியூபர் கைது

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் அவ்வழியாக சென்ற இளம்பெண்களிடம், ‘நான் யூ டியூபராக இருக்கிறேன். நீங்கள் பர்தா அணிந்து பாருங்கள், இதை எப்படி உணர்கிறீர்கள் என சொல்லுங்கள், நாங்கள் இதை யூ டியூப்பில் போட போகிறோம், அதிகமான லைக் வரும்’ எனக்கூறியுள்ளார். இதை அணிய மறுத்த சில இளம்பெண்களிடம் அவர் வற்புறுத்தி அதை அணிய வேண்டும் எனக்கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் கோவையை சேர்ந்த யூ டியூபர் அனாஸ் அகமது (22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

The post இளம்பெண்களை பர்தா அணிய வற்புறுத்திய யூ டியூபர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,YouTube ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...