×
Saravana Stores

படித்து முடித்து பதிவு செய்த வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகளுககு வருமான உச்ச வரம்பு இல்லை

கரூர், ஜூலை 5: படித்து முடித்து பதிவு செய்த வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுககு வருமான உச்ச வரம்பு இல்லை என்று கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்த வேலை வாயப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300ம், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400ம் மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் படடதாரிகளுக்கு ரூ.1000ம் வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற கல்வித்தகுதிகளை மாவட்ட வேலை வாய்ப்பு மறறும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஜூன் 30ம்தேதியுடன் 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவுற்ற பதிவுதாரர்களும் தகுதியானவர்கள் ஆவார்கள்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுககு வருமான உச்ச வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகை பெறுபவராக இருக்க கூடாது.

மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளாக இருக்க கூடாது இந்த நிபந்தனை தொலைதூர கல்வி அல்லது அஞசல வழிக் கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேலும், மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.இந்த தகுதியை கொண்டவர்கள் உடனடியாக கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post படித்து முடித்து பதிவு செய்த வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகளுககு வருமான உச்ச வரம்பு இல்லை appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District Employment Office ,Dinakaran ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...