சேந்தமங்கலம், ஜூலை 5: நாமக்கல்லில் இருந்து திருச்சி மாவட்டம் துறையூருக்கு, பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஓட்டிச் சென்றார். எருமப்பட்டி அருகே பஸ் சென்ற போது, பின்பக்க சீட்டில் அமர்ந்து வந்த இருவர் தகராறு செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் ஆனந்தன், பஸ்சை எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓட்டிச் சென்றார். இதை பார்த்த இருவரும், பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிய ஓடியவர்களை தேடி வருகின்றனர்.
The post அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து ரகளை 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.