- சிறப்பு மக்கள் நீதிமன்றம்
- கரூர்
- மாவட்ட நீதிபதி
- சன்முகா சுந்தரம்
- தமிழ்நாடு மாநில சட்ட விவகார ஆணையம்
- உச்சநீதிமன்றத்திற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம்
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு விழிப்புணர்வு பரப்பும்
கரூர், ஜூலை 4: கரூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29ம்தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில், பார் அசோசியேஷன், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கரூர் நகர காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ண குமார் செய்திருந்தார்.
The post சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம் appeared first on Dinakaran.