×
Saravana Stores

காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேந்தமங்கலம், ஜூலை 4: சேந்தமங்கலம் அரசு கலைக் கல்லூரியில், காலியிடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், கலந்தாய்வு 8ம் தேதி நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் 2024 -25ம் ஆண்டுக்கான கல்லூரி கல்வி இயக்குனரின் செயல் முறைப்படி, இளநிலை பட்டப்படிப்பிற்கு கல்லூரியில் சேர விருப்பம் இருந்தும், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்று (4ம் தேதி) முதல் நாளை வரை, கல்லூரி இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த முகவரியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதியில் கலந்தாய்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Senthamangalam Government Arts College ,Bharathi ,
× RELATED பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தீவிரம்