×
Saravana Stores

தொழிலாளி மர்ம சாவு

ரெட்டிச்சாவடி, ஜூலை 4: கடலூர் மாவட்டம் ஆண்டார்முள்ளிபள்ளம் காயல்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராசு(60), கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா(55). இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். கோவிந்தராசு சவுக்கு மரம் வெட்டும் தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று கோவிந்தராசு சவுக்கு மரம் வெட்டுவதற்காக அதே பகுதியை சேர்ந்த சிலருடன் தூக்கணாம்பாக்கம் அடுத்த எம்.பி அகரம் பகுதியில் சவுக்கு மரம் வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது வெளியே சென்று வருவதாக கூறியவர் பின்னர் வெகு நேரமாகியும் வராததால் அவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது சவுக்கு தோப்பு அருகே உள்ள அறுவடை முடிந்த நெல் வயலில் கோவிந்தராசு மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சென்று கோவிந்தராசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கோவிந்தராசு மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி மர்ம சாவு appeared first on Dinakaran.

Tags : Redtichavadi ,Govindarasu ,Kamarajar Street ,Andarmullipallam ,Kayalpattu, Cuddalore district ,Lalitha ,
× RELATED ரெட்டிச்சாவடி அருகே பைக் மீது மினிலாரி மோதி 3 பேர் படுகாயம்