டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை சில நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பின்னர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் 2ம் தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் இதையடுத்து விசாரணை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீடித்துள்ளது.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி-ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.