கரூர், ஜூலை 3: கரூர் தாந்தோணிமலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஒன்றியம் வாரியாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று தொடக்க கல்வி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.அப்போது, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள நான்கு காலிப் பணியிடங்களுக்கு பதிலாக, நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் மூன்று காலிப்பணியிடங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது எனக் கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த சிலர், கலந்தாய்வு நடைபெற்ற அறையின் உட்புறத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் தவிர்த்து மற்ற ஒன்றியங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு காரணமாக தாந்தோணிமலை மேல்நிலைப் பள்ளி வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
The post தாந்தோணிமலை பள்ளி வளாகத்தில் தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.