×

ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது

திருத்தணி: திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மேற்பார்வையில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நேற்று திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள சிவ்வாடா, நல்லாட்டூர் ஆகிய எல்லையோர கிராமங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கள்ளச்சாராயத்தை வீடுகளில் பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்த யுவராஜ் (27), காமராஜ் (எ) மைக்கேல் (29), மோகன் சுந்தரம் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ஆந்திர மாநில கள்ளச்சாராயம் 19 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் நல்லாட்டூரைச் சேர்ந்த ராணி என்பவர் வீட்டில் பதுக்கி விற்பனை செய்த 8 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ராணி கைதானார். இந்நிலையில், அந்த கிராமத்தைச் நேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் வந்தனர். கள்ளச்சாராய சோதனை என்ற பெயரில் தொடர்பில்லாதவர்களை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் செல்வதாக புகார் அளித்தனர். அவர்களிடம் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.

The post ஆந்திர எல்லை கிராமங்களில் வீடுகளில் கள்ளச்சாரயம் பதுக்கல்: பெண் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra border ,Thiruthani ,DSP ,Vignesh ,RK Pettah Prohibition Enforcement Division ,Inspector ,Vijayalakshmi ,Sivwada ,Nallatur ,Tiruvalangadu ,Andhra border region ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையில் ரயில்வே...