×
Saravana Stores

அமாவாசை, வார இறுதி நாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: வெள்ளிக்கிழமை 5ம் தேதி அமாவாசை, 6ம் தேதி சனிக்கிழமை, 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5ம் தேதி வெள்ளிக்கிழமை 415 பேருந்துகளும், 6ம் தேதி சனிக்கிழமை 310 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 5ம் தேதி வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், 6ம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 5ம் தேதி வெள்ளிக்கிழமை 15 பேருந்துகளும் 6ம் தேதி சனிக்கிழமை 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,350 பயணிகளும் சனிக்கிழமை 3,264 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,290 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post அமாவாசை, வார இறுதி நாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Amavasai ,Chennai ,Managing Director ,Tamil Nadu Government Rapid Transport Corporation ,
× RELATED தீபாவளி சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: எந்த ஊருக்கு பேருந்து நிலையம்?