×
Saravana Stores

அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட எனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் தான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எனது உரையில் இருந்து சில பகுதிகளை நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அவை விதி எண் 380-ன் படி நீக்கத் தேவையற்ற பகுதிகளையும் தனது உரையிலிருந்து நீக்கியுள்ளதாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

 

The post அவைக் குறிப்பில் இருந்து பேச்சு நீக்கம்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Speaker ,Lok Sabha ,House ,Dinakaran ,
× RELATED தொழிலாளர்களின் கனவை சிதைக்கும்...