×

நடிகர் அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ ரிலீஸ்

சென்னை: நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை இணையதளத்தில் வெளியானது. அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா நடிக்கும் படம் வலிமை. வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று மாலை யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலும் அஜித், கார்த்திகேயா நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சியும், அந்த காட்சி படமானபோது அவர் விபத்தில் சிக்கியதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்….

The post நடிகர் அஜித்தின் வலிமை மேக்கிங் வீடியோ ரிலீஸ் appeared first on Dinakaran.

Tags : Ajith ,Chennai ,Huma Qureshi ,Karthikeya… ,Dinakaran ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்