சென்னை: வங்காளதேசத்தைச் சேர்ந்த கணையப் புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மஞ்சள் காமாலை நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனை குணப்படுத்தி உள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 78 வயதான கணையப் புற்றுநோயாளிக்கு பித்த நாளத்தில் கட்டி அடைத்து, பித்தம் குவிந்து அது மஞ்சள் காமாலை நோயாக மாறியதால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு கீமோதெரபி சிகிச்சையும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சைகாக எஸ் ஆர் எம் குளோபல் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு பல்வேறு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் இறுதியாக எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மஞ்சள் காமாலை நோய்க்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது.
இந்த மருத்துவ செயல்முறை பித்த நாளம் மற்றும் சிறுகுடல் (சிறுகுடலின் ஒரு பகுதி) இடையே ஒரு ஸ்டென்ட்-ஐ பொருத்தி புதிய பாதையை உருவாக்கி, பித்தம் வெளியேறும் வகையில் இந்த சிகிச்சை அமைந்தது. இதைத் தொடர்ந்து அவரது சொந்த நாட்டிற்கு சென்று, புற்றுநோயிக்கு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சிகிச்சை தொடர்பாக இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் என். ஏ. ராஜேஷ் கூறியதாவது:
இறுதி நிலை புற்றுநோயாளியின் பித்த நாளத்தில் உருவான கட்டியின் விளைவாக அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. பசி உணர்விழப்பினால் அவரால் உணவு சாப்பிட முடியவில்லை. மேலும் தூக்கமின்மை பிரச்சனைகள் இருந்தன. மஞ்சள் காமாலை ஏற்பட்டதால் கீமோதெரபி சிகிச்சையை அவரால் தொடர முடியவில்லை. நோயாளியின் முதுமை மற்றும் உடல் பலவீனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மேம்பட்ட எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்ப சிகிச்சையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
மேலும் பொதுவான பித்த நாளத்திற்கும் சிறு குடல் மாற்றுப் பகுதிக்கும் இடையே உள்நோக்கியியல் மூலம் ஒரு இணைப்பை உருவாக்கினோம். இதனால் சிறுகுடலில் இருந்த பித்தம் வெளியேறும். புதிய பாதையை வலுப்படுத்த, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்டென்ட்டையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை appeared first on Dinakaran.