×

சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம்

சங்கரன்கோவில், ஜூலை 2: சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து மாவட்ட மருத்துவ அதிகாரி கோவிந்தன் ஆலோசனையின் படி, கரிவலம்வந்தநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஓஆர்எஸ் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை பெட்டகங்களை வழங்கினர். முகாமில் மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, சுபாஷ், குகன், கருப்பசாமி, செவிலியர்கள் சுதா, பார்வதி, கலைச்செல்வி, முத்துமாரி, அங்கன்வாடி பணியாளர்கள் செல்வி முத்துக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Sankarankov ,SANKARANKO ,OFFICER ,GOVINDAN ,KARIVAMVANDNALLUR REGIONAL GOVERNMENT PRIMARY HEALTH CENTER ,PREVENTION ,Sankaranco ,Diarrhea Prevention Medical Camp for Children ,Sangarankovil ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து...