×
Saravana Stores

நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் முறைகேடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : INDIA ALLIANCE ,Delhi ,NEET ,INVESTIGATIVE BODIES ,EU ,India Coalition ,Dinakaran ,
× RELATED உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு