×
Saravana Stores

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் செலவின கணக்குகள் சமர்ப்பிக்க வேண்டும்

நாகப்பட்டினம்,ஜூன்29: நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை நாளை (30ம் தேதி) சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாளுக்குள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் கணக்குளை ஒப்படைக்க வேண்டும். அதற்கான தேர்தல் செலவு கணக்குகள் ஒத்திசைவு கூட்டம் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கடந்த 26ம் தேதி நடந்தது.

அப்போது தேர்தல் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆவணங்களுடன் வரும் 30ம் தேதி காலை 10 மணியளவில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவின கணக்குளை சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் செலவின கணக்குகள் சமர்ப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Parliament ,Nagapattinam ,Collector ,Janitam Varghese ,Election ,Parliamentary ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்ட...