தேவையானவை
சிவப்பு சோளம் – அரை கப்
துவரம்பருப்பு – கால் கப்
உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறு துண்டு
மிளகாய் வற்றல் – 4
பெரிய வெங்காயம் – ஒன்று
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை:
சிவப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்துவிட்டு சேர்த்து அத்துடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர், அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். மேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும்.
The post சிவப்பு சோள அடை appeared first on Dinakaran.