தேவையானவை
மணத்தக்காளி கீரை – ஒரு கட்டு
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 2
மிளகுத் தூள் – சிறிது
தண்ணீர் – 2 டம்ளர்
எலுமிச்சை – அரை மூடி
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
பெருங்காயத் தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
மணத்தக்காளி கீரையைச் சுத்தம் செய்து இலையை மட்டும் நறுக்கி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலையைத் தாளித்த பின் வெங்காயத்தை வதக்கவும். அடுத்து, தக்காளியை வதக்கவும். அத்துடன் மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஆறவைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர், 2 டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அத்துடன் அரைத்த கீரைக் கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பின்னர், தேவையான உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சைச் சாறு 3 சொட்டு விட்டு கலந்து பரிமாறலாம்.
The post மணத்தக்காளிக் கீரை சூப் appeared first on Dinakaran.