தேவையான பொருட்கள்
மேகி 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1
கறிமசாலா தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
கான்ஃப்ளார் மாவு 2 ஸ்பூன்
எலுமிச்சை பாதி
கொத்தமல்லி இலை சிறிதளவு.
செய்முறை
அரைவேக்காட்டில் வேக வைத்த மேகியை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லி இலை, எலுமிச்சைச் சாறு, உப்பு, தேவையான அளவு மிளகாய்ப் பொடி, கறி மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். இரண்டு ஸ்பூன் கான்ஃப்ளார் மாவு சேர்த்து கைகளால் கலந்து கட்லட் போல வட்டமாக தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் தட்டி வைத்துள்ள மேகி துண்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மேகி கட்லெட் ரெடி.
The post மேகி கட்லட் appeared first on Dinakaran.