×

தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, ஜூன் 26: நாமக்கல் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள், பாலு, மந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொண்டரணி துணை செயலாளர் ஜனார்த்தன் மற்றும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தேமுதிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Democratic ,Tiruchengode ,Namakkal North District Democratic Party ,Kallakurichi ,incident ,Anna statue ,North District ,DMD Secretary ,Vijay Saravanan ,City Secretary ,Gunasekaran ,Democratic Party Demonstration ,Dinakaran ,
× RELATED அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து...