×

பாளை ராஜகோபால சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

நெல்லை, ஜூன்26: பாளை அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாளை அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி கோயிலில் நேற்று 15ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு கும்பங்கள் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர் மூலவர் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்லப்பட்டு மூலவர், உற்சவர் மற்றும் விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், நாராயணா, நாராயணா என்று பக்தி பரசவத்துடன் கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதைதொடர்ந்து இரவு 7 மணிக்கு ராஜகோபால சுவாமி மற்றும் அழகிய மன்னார் சுவாமிகளின் இரட்டை கருட சேவையும், தாயார்கள் தேவி அன்ன வாகனத்திலும், பூதேவி கஜலட்சுமி வாகனத்திலும், கிருஷ்ண பகவான் தோளுக்கினியான் வாகனத்திலும் திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பாளை ராஜகோபால சுவாமி கோயில் வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Palai Rajagopala Swamy Temple ,Varushabhishekam ,Nellai ,Palai Ajayyamannar Rajagopalaswamy Temple ,Swami ,Mannar Rajagopalaswamy Temple ,Palai ,Palai Rajagopala Swami Temple ,
× RELATED சேரன்மகாதேவி அருகே பொன் பெருமாள் சாஸ்தா கோயில் வருஷாபிஷேகம்