புதுடெல்லி: தமிழ்நாட்டு மோட்டர் வாகன சட்டப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே இயக்க அனுமதி உள்ளது. ஆனால், பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தமிழகத்தின் அண்டை மாநுலங்களிலும், பிற வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கொண்டு பேருந்துகளை தமிழகத்தில் இயக்கி வருகிறது. இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் தமிழகத்துக்குள் இயக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறைகால சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்றிருந்தால் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதை தமிழக அதிகாரிகள் தடுக்கக்கூடாது. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு தடை தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.