×

கோவில்பட்டியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம்

கோவில்பட்டி, ஜூன் 25: கோவில்பட்டியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கடைகள், நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் தனியார் தியேட்டர் எதிர்புறம் தனிநபர் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்தும், பஞ்சாயத்து அனுமதி பெறாமலும் 2 கடைகள் கட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 2 கடைகளையும் இடித்து அகற்ற உத்தரவிட்டார். அதன்படி நேற்று 2 கடைகளும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post கோவில்பட்டியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Ilubaiyurani ,Etdayapuram road ,
× RELATED கோவில்பட்டியில் சாலையில் நின்றவர்கள் மீது மரம் விழுந்து பெண் காயம்