×

பள்ளியில் பெண்ணுடன் ஜாலி ஆசிரியரை இழுத்து வந்து மரத்தில் கட்டி அடி, உதை

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருமலை : தெலங்கானாவில் பள்ளி நேரத்தில் திருமணமான பெண்ணுடன் ஜாலியாக இருந்த ஆசிரியரை பொதுமக்கள் இழுத்து வந்து மரத்தில் கட்டிவைத்து அடித்து உதைத்த வீடியோ காட்டிசிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டையில் பழங்குடியினர் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடையில் இருவரும் நெருங்கி பழகி திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பள்ளி நேரத்தில் இருவரும் பள்ளியிலேயே நெருக்கமாக இருந்தனர். இதனை கண்ட கிராம மக்கள் அந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து ராமதாசை பள்ளியில் இருந்து இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து சரமாரி அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வராவ்பேட்டை போலீசார் கிராமத்திற்கு சென்று ஆசிரியர் ராமதாசை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு நல்ல போதனை செய்து இளம் தலைமுறையினருக்கு உதாரணமாக திகழக்கூடிய ஆசிரியர் இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து ஆசிரியர் சமூகம் இதுபோன்ற சிலரால் அவப்பெயர் ஏற்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post பள்ளியில் பெண்ணுடன் ஜாலி ஆசிரியரை இழுத்து வந்து மரத்தில் கட்டி அடி, உதை appeared first on Dinakaran.

Tags : Jolly ,TELANGANA ,Telangana State ,Bhadrathri ,Uthai ,
× RELATED பேய் இருப்பதாக நம்பிய மாணவர்களின்...