×

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு

நீடாமங்கலம், ஜூன் 23: நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது. நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தில் சிறப்பு பெற்ற சதுரங்க வல்லபநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை பவுர்ணமியை முன்னிட்டு சதுரங்க வல்லபநாதருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து அங்கு தனி சன்னதியில் வடக்கு பார்த்து காட்சியளித்து வரும் சாமுண்டீஸ்வரி அம்மன் எதிரே உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் சன்னதிகளில் உள்ள ராஜராஜேஸ்வரி, கற்பகவல்லி சமேத சதுரங்க வல்லபநாதர், சாமுண்டிஸ்வரி அம்மன் சன்னதிகளில் அலங்காரம் செய்யப்பட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றினர்.

The post நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Bhuvanur Chaturanga Vallabhanathar Temple ,Needamangalam ,Chaturanga Vallabhanathar temple ,Bhuvanur ,Chaturanga ,Bhuvanur Chaturanga Vallabanathar Temple ,
× RELATED நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரம்