×

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இணை இயக்குனர் பாராட்டு

நாமக்கல், ஜூன் 23: நாமக்கல்லில் சிறப்பாக பணிபுரிந்த 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை நிறுவன பணியாளர்களை, மருத்துவத்துறை இணை இயக்குனர் பாராட்டி பரிசு வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 27 அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் இரவு, பகல் என ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு, அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்குள்ளேயே பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்க்கின்றனர். இவ்வாறு முதல் உதவி சிகிச்சை அளித்து சிறப்பாக பணிபுரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ராமலிங்கம், விஜயகுமார், கார்த்திக், ரேணுகோபால் ஆகியோரை, மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜ்மோகன் பாராட்டி பரிசளித்தார். நிகழ்ச்சியில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை நிறுவன சேலம் மண்டல மேலாளர் அறிவுக்கரசு, நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இணை இயக்குனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Department ,Emergency Ambulance Service Company ,Dinakaran ,
× RELATED இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு