×

குஜராத்தில் மின்னல் வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த 2 மாணவிகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; டிரைவர் கைது

வதோதரா: குஜராத்தில் அதிவேகமாக சென்ற வேனில் இருந்து கீழே விழுந்த மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குஜராத்தின் வதோதரா மாவட்டம் தார்சாலி பகுதியில் பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு ஒரு வேன் சென்றது. குறுகிய தெருவுக்குள் அந்த வேனை அசுர வேகத்தில் ஓட்டி சென்றார். மின்னல் வேகத்தில் பறந்த வேனின் பின்புற கதவு திறந்து கொண்டதால் 2 மாணவிகள் கீழே விழுந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வேகமாக சென்று மாணவிகளை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்கு தூக்கி சென்று உட்கார வைத்தனர். அந்த மாணவிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநரின் அஜாக்கிரதை, வாகன பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்களையும், கண்டனங்களையும் எழுப்பி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

The post குஜராத்தில் மின்னல் வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த 2 மாணவிகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Vadodara ,Tharsali ,Vadodara district ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை