×

அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார்: துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பச்சை வண்ணத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தார். விவாதம் தொடங்கியதும், குறுக்கிட்டு எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், ‘பள்ளிக்கூடங்களில் சுதந்திர தினம் குடியரசு தினம் என்றால் ஆசிரியர்கள் மட்டும் தேசியக்கொடி குத்திக் கொள்வது கிடையாது. பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கொடியை கொடுத்து சட்டையில் குத்தச் சொல்வார்கள்.

அதுபோல வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தான் மட்டும் பச்சைத் துண்டு அணிந்து வந்தால் போதாது, பேரவையில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்’ என நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. நாளை காலை ஒரு பையில் பச்சை துண்டை போட்டு அனைத்து எம்எல்ஏக்கள் டேபிள்களிலும் வைத்து விடுவதுதான் சிறப்பு’ என்று கூறினார். அவை முன்னவரின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

The post அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பச்சை துண்டு அணிந்து வந்தார்: துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Duraimurugan ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Agriculture Department ,Speaker ,Durai Murugan ,Independence ,
× RELATED காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி...