×

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அபூர்வ நிகழ்வு : கார்த்திகை மாதத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!!

திருச்சி : 108 வைணவத் தலங்களில் முதன்மையாக கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.பூலோக வைகுண்டம் என்று போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாத ஆலயத்தில் பிரசித்தி பெற்ற  வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து தினம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நம்பெருமாள் நாச்சியர் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடந்தது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு  நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை,  கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்பட்டு ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக  சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் கடந்து சென்றார். சொர்க்கவாசல் திறப்புக்கு பின்னர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்வார்.ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். செர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாள் தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அபூர்வ நிகழ்வு : கார்த்திகை மாதத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!! appeared first on Dinakaran.

Tags : Trichi Srirananga Ranganadar Temple ,Karthika Month ,Trichy: ,Trichy Sriranangam Ranganadar Temple ,Paramabhatta Gate ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...