×

கோவாவில் பெட்ரோல், டீசல் வாட் வரி உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

பனாஜி: கோவாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி பாஜ அரசு அறிவித்துள்ளது. கோவாவில் தற்போது பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. கோவாவில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.40க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.87.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசால் மீதான வாட் வரியை உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில அரசு துணைச்செயலாளர் பிரணாப் ஜி பட் நேற்று வௌியிட்டார். இதையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.1.36 பைசா உயர்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் யூரி அலேமாவோ கூறியதாவது, “வாட் வரி உயர்வு உணர்ச்சியற்ற அரசின் மனித நேயமற்ற செயல். வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

The post கோவாவில் பெட்ரோல், டீசல் வாட் வரி உயர்வு: எதிர்க்கட்சிகள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Goa ,Panaji ,BJP government ,Pramod Sawant ,BJP ,
× RELATED காரை கொஞ்சம் நகர்த்த சொன்ன நடிகரிடம்...