×
Saravana Stores

மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்

புதுடெல்லி: நாட்டில் கிரிமினல் சட்டங்களை திருத்தி 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இவை வருகிற ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் முதல்வர் மம்தா கூறியிருப்பதாவது: 3 கிரிமினல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பது கவலையளிக்கிறது. 146 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கியமான மூன்று மசோதாக்களையும் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றியது ஜனநாயகத்தின் இருண்ட காலம். இந்த விவகாரம் தற்போது ஆய்வுக்குரியது. எனவே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் தேதியை குறைந்தபட்சம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் மம்தா குறி ப்பிட்டுள்ளார்.

The post மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Lok ,Sabha ,Mamata ,PM Modi ,New Delhi ,Parliament ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Union Home Minister ,Amit Shah ,Dinakaran ,
× RELATED வெறுப்பை விதைத்து ஆட்சியில்...