×

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார். விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். நீதிபதி கோகுல்தாஸ் உடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் முன்னதாக தனித்தனியாக விசாரணை நடத்தினார். விஷச் சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து உயிரிழப்பு தொடர்பாக 4 விதமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Judge ,Kokultas ,Kalalakurichi Hospital ,Kallakurichi ,Kallakurichi Government Hospital ,District Ruler Prashant and Revenue Department ,Gogultas ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் ஏற்பட்ட சாலை...