×

தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை நடத்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழக அரசின் சார்பில், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழுவின் மூலம், தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த அவர்களது கலைப்படைப்புகள் அடங்கிய கலைக் காட்சியினை தனிநபர் கலைக்காட்சியாக நடத்திட ஒரு நபருக்கு ரூ.25,000/- வீதம் 10 கலைஞர்களுக்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து கூட்டாக கூட்டுக் கலைக்காட்சியாக நடத்திட ஒரு குழுவுக்கு ரூ.50,000/- வீதம் 5 குழுக்களுக்கும் அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* விண்ணப்பதாரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ நடைபெற்ற கலைக்காட்சிகளில் பங்கு கொண்டவர்களாகவும், நுண்கலைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
* கலை பண்பாட்டுத் துறை – ஓவிய நுண்கலைக் குழுவின் கலைச்செம்மல் விருது பெற்றவர்கள், கலையமைப்புகள் பெயரில் கலைக்காட்சி நடத்த விரும்புபவர்கள், தற்போது நுண்கலை பயின்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கக் கூடாது.
* இதற்கு முன் இத்திட்டத்தில் பயனடைந்தோர் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இயலாது.
* விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய தன் விவரக் குறிப்பு (Bio-D­ata), சிறந்த படைப்புகளின் புகைப்படங்கள் 5 எண்ணிக்கைகள் (A4 size), அவரவர்கள் படைப்புத் திறன் பற்றிய செய்திக் தொகுப்புகள் அடங்கிய விவரங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 05.07.2024-க்குள் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. (இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக் கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு அரசு நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Tamil Nadu ,CHENNAI ,
× RELATED துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!!